கலசபாக்கம் தொகுதியில் மக்கள் தரிசனம் என்ற நிகழ்ச்சி மூலம் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார்.
அதன்படி ஜமுனாமரத்தூர் ஒன்றியம் குட்டக்கரை , கோவிலூர்,வீரப்பனுர் ஆகிய கிராமங்களில் மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் குறைகேட்பு முகாம்களை நடத்தி கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுத்துள்ளேன், மலைவாழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் விதத்தில் ஜமுனாமரத்தூர் தலைமை இடமாகக் கொண்டு தனி தாலுகா தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக உங்கள் வீட்டு வேலைகளுக்காக என்னால் முடிந்தவரையில் செய்துள்ளேன். சட்டமன்றத்தில் வலியுறுத்தி கலசபாக்கம் தளத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தேர்தலுக்காக மட்டும் உங்களைச் சந்திப்பவன் நான் அல்ல, எந்த நேரத்திலும் நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றத் தயாராக உள்ளேன்.
ஆதரவற்ற முதியோர்களுக்கு என்னுடைய சொந்த செலவில் கலசபாக்கம் தொகுதியில் முதியோர் இல்லம் தொடங்க உள்ளேன், இதில் முதியோர்களுக்குத் தேவையான உணவு, உடை, தங்கும் விடுதி செய்து தரப்படும். மலைவாழ் மக்கள் தவறான பாதையில் செல்லக் கூடாது என்பதற்காக ஜமுனாமரத்தூர் பகுதியில் சிறு தொழில்கள் தொடங்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜமுனாமரத்தூர் ஏழைகளின் ஊட்டி சுற்றுலாத் தலமாக மாற்ற வலியுறுத்தி சுற்றுலாத்துறை ஆய்வு செய்துள்ளனர், விரைவில் ஜமுனாமரத்தூர் சுற்றுலாத் தலமாக மாறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்