கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள 2538 அதிமுக நிர்வாகிக்கு பொங்கல் பரிசு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார். கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக எம்எல்ஏ பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற நாள் முதல் தீபாவளி பொங்கல் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களில் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கலசப்பாக்கம் புதுப்பாளையம் ஜமுனாமரத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுக்கு தனது சொந்த செலவில் பரிசுகளை வழங்கி வருகிறார். அதன்படி வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு கலசப்பாக்கம் பகுதியை சேர்ந்த 2538 நிர்வாகிகளுக்கு குக்கர், இனிப்பு, கேலண்டர், வேஷ்டி மற்றும் சேலைகள் வழங்கி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார்.
கலசப்பாக்கம் தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு
Posted in நிகழ்வுகள்