கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஊராட்சியை சேர்ந்த சுமார் 20 குடும்பங்களுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ் இணையம் மூலமாக கொரோனா நிவாரண உதவி வழங்கும்மாறு கோரிக்கை வைத்தனார்.
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் மக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசிலித்து கலசபாக்கம் “வென்றெடுப்போம் வா” ஒருங்கிணைப்பாளர் திரு.சு.சீனுவாசன் மூலமாக அவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா நிவாரண தொகுப்பாக அரிசி மற்றும் காய்கறி அடங்கிய சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது.