கலசப்பாக்கம் தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம், புதுப்பாளையம், ஜம்னாமரத்துர், போளூர் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கிருமிநாசினி தெளித்தல், முகக்கவசம் அணிவித்தல், துண்டு பிரசுரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஆதமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகே இருந்த முதியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் முக கவசம் வழங்கினார். மேலும் முதியவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண பொருட்கள் மற்றும் உதவித்தொகை ஆகியவை வீடு தேடி வரும். எனவே வீட்டை விட்டு எவரும் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.