மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு பகுதியில் இருக்கும் ஏழு ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 500 மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி மற்றும் காய்கறிகள், அடங்கிய சமையல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு, தனது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகுப்பை வழங்கினார்.