மனம் கூட ஒரு கல்லறைதான் தினம் தினம் பல ஆசைகள் அங்கே புதைக்கப் படுவதால். மனஉறுதி இல்லாதவர்களுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு சமனானது.
மனம் மறுத்து போய்விட்டால்
தன்னம்பிக்கை என்ற ஆணிவேர்
வலுவிழந்து போய்விடுகிறது.
மனம் தான் வாழ்வின் விளைநிலம். அதன் தன்மையைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமைகிறது. நீங்கள் நல்லதை நினைத்து நகர்த்தும் செயல்கள் யாவும் நன்மைகளை
கொடுக்கும்.
நிம்மதியாக நீங்கள் வாழ
வேண்டுமெனில் உங்கள் மனதின்
கவலைகளை தூண்டிவிடும் சிலரை
சந்திப்பதையும், அவர்களைப் பற்றி
சிந்திப்பதையும் தவிர்த்துக்
கொள்ளுங்கள்.