கடமைகள் என்பவை பேனாவின் மையைப் போன்றது…. மை இருக்கும் வரை தான், பேனாவுக்கு மதிப்பு…
கடமையைச் செய்யும் வரை தான், மனிதனுக்கு மதிப்பு…
செய்யும் செயலை கடமைக்குச் செய்யாமல், கண்ணிமைக்குள் வைத்து செய்யுங்கள்…
கடமையைச் செய்பவர்க்குத் தான், உரிமை உண்டு…
சரியான தருணத்திற்காக காத்திருக்காமல்… கிடைத்த தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்…!
உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் தண்டனை அல்ல. அது ஒரு சோதனை மட்டுமே ..
உழைப்பையும் ஊக்கத்தையும் மட்டும் வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது..
உழைப்பு மற்றும் ஊக்கத்துடன் தன்னம்பிக்கை எனும்ஆயுதமும் இணைந்தால் மட்டும் தான் வெற்றிக்கு வித்திடும்..
மனம் நிறைந்த அன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் சந்தோசத்தை கொண்டு வந்தே தீரும்.
இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
கடமையைச் செய்பவர்க்குத் தான், உரிமை உண்டு
Posted in காலை வணக்கம்