திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை ஒன்றியத்தைத் தனி தாலுகாவாக மாற்றி அமைக்கப்பட்டது.
அ.தி.மு.க. மட்டும் தான் மக்களுக்காகச் செயல்படும் ஒரு இயக்கமாகும். இதனால் தான் கலசபாக்கம் தொகுதிக்கு 2 தாலுகா வழங்கப்பட்டு உள்ளது. ஜவ்வாது மலை தனி தாலுகா பெறப் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சரிடம் போராடி மலைவாழ் மக்களுக்கு வழங்கி உள்ளார் என நன்றி தெரிவிக்கும் விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார்