கலசப்பக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையம் அருகே நேற்று கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் பேசுகையில், ஜமுனாமரத்தூர் மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் ஜமுனாமரத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுக்கா தொடங்கப்பட்டு ரூ.4 கோடி மதிப்பில் தாலுக்கா அலுவலகம் நிறுவப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பை அதிகரிக்க விரைவில் சிட்கோ தொழிற்பேட்டை விரைவில் தொடங்கப்படும். விரைவில் ஜமுனாமரத்தூரை சுற்றுலா தலமாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் மினி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஜமுனாமரத்தூர் சுற்றுலா தலமாக மாற்றப்படும்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்
Posted in திட்டங்கள், நிகழ்வுகள்