செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேருந்து நிலையத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 103.வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு, வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பங்கேற்று எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து திரளாக பங்கேற்ற பொதுமக்களுக்கு இனிப்பு, வேட்டி, சேலைகள் வழங்கி கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பொய்யாமொழி, வழக்கறிஞர்கள் ராதா, ரமேஷ், அல்லியந்தல் பாரதியார் என பலர் பங்கேற்று சிறப்பித்தார்.