தூய்மை கலசபாக்கம் என்னும் இயக்கம் மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி அவர்களால் இனிதே துவக்கி வைக்கப்பட்டது. நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கலசபாக்கம் இயக்கத்தின் தலைவர் ஜெ சம்பத் கலசபக்கம் பொதுமக்களிடையே தூய்மையை வலியுறுத்தியும் தூய்மையாக இருப்பதால் கிடைக்கும் பலன்களையும் தூய்மை திட்டத்தை நிறைவேற்றினால் நமக்கு கிடைக்கும் மற்ற நல்ல விஷயங்களையும் பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.
பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவையும் பகிர்ந்து கொண்டு பாராட்டி மகிழ்ந்தனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. வந்திருந்த பொதுமக்களும் அரசு அலுவலர்களும் “தூய்மை கலசபாக்கம்” என்ற நீல நிற ஆடை,நீலநிற தொப்பியையும் உடுத்தி தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர்.
தொடர்ந்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V. பன்னீர்செல்வம் அவர்களின் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது, இதில் தூய்மை கலசபாக்கம் இயக்கத்தின் தலைவர் ஜெ சம்பத் பணியேற்று இந்த திட்டத்தை பற்றி பத்திரிகையாளர் இடையே விளக்கமாக எடுத்துரைத்தார்.