கலசபாக்கம் அருகே செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. போளூரை அடுத்து ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, செங்கம், கலசப்பாக்கம் கரையாம்புத்தூர் வழியாக செல்கிறது.
இந்த நிலையில் ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்றி ஆற்று ஓரங்களில் படிந்துள்ள கழிவுகளை அகற்றும் பணி தூய்மை கலசப்பாக்கம் என்ற இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
கலசப்பாக்கம் சந்தைமேடு பகுதியில் செல்லும் செய்யாற்றில் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார் , சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் எம்எல்ஏ, இயக்கத்தின் தலைவர் ஜெ சம்பத், கோட்டாட்சியர் மைதிலி, வட்டாட்சியர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா அன்பழகன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் துரை, ஒன்றிய குழு துணை தலைவர் கருணா மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி ,பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்