சீரிய சிற்பத்துக்கு
சிற்பியே பொறுப்பு…
சிறந்த ஓவியத்திற்கு
ஓவியரே பொறுப்பு…
வாழும் வாழ்க்கைக்கு
வாழ்பவரே பொறுப்பு…
நம் வாழ்க்கைக்கு
நாமே பொறுப்பு !
சிறப்பாக வாழ்வோம்,
வாழ வைப்போம் !!
சீரிய சிற்பத்துக்கு
சிற்பியே பொறுப்பு…
சிறந்த ஓவியத்திற்கு
ஓவியரே பொறுப்பு…
வாழும் வாழ்க்கைக்கு
வாழ்பவரே பொறுப்பு…
நம் வாழ்க்கைக்கு
நாமே பொறுப்பு !
சிறப்பாக வாழ்வோம்,
வாழ வைப்போம் !!
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…
உள்ளத்தின் உருவம்
உலகமாக தெரியும்…
வீட்டில் விதைத்ததே
நாட்டில் விளையும்…
வீடு எப்படியோ,
நாடும் அப்படியே…
உள்ளம் எப்படியோ,
உலகமும் அப்படியே…
சிறிய உலகம் – வீடு !
பெரிய வீடு – இந்த உலகம் !!
மகிழ்வான காலை வணக்கங்கள்…
வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848
உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை
உங்களை யாரும் தாழ்த்த முடியாது…
உங்களை நீங்கள் உயர்வாக நினைக்காத வரை
உங்களை யாரும் உயர்த்த முடியாது…
உங்களின் உயர்வும் தாழ்வும்,
உங்களில் இருந்தே தொடங்குகிறது…
உங்கள் எண்ணங்களாலே தொடர்கிறது…
அச்சம் தவிர்…
எண்ணத் தூய்மை கொள்…
பொதுநலன் கருது…
எவரொருவர்
பொதுநலன் கருதி,
பயமின்றி
மன தைரியத்துடன்,
மனத்தூய்மையுடன்
செயல்படுகிறாரோ
அந்தத் தனி ஒருவர்
இந்த உலகத்தில் உள்ள
அனைவருக்கும் ஒப்பானவர் ஆவார்…
வாருங்கள்,
ஒன்றுகூடி
புது உலகம் படைப்போம் !
புரட்சித்தலைவர்
எம்ஜிஆரின் பிறந்த நாள்…
தெய்வம் பூமியில்
அவதரித்த நாள்…
என்றென்றும்
எங்கள் இதயங்களில்
வாழும் இதயக்கனியே…
உங்கள் நினைவால்
செய்வதெல்லாம்
நன்மையே…
உங்கள் நினைவால்
சிந்திப்பது எல்லாம்
நன்மையே…
நினைவெல்லாம் நீயே
என் இதய தெய்வமே…
உங்கள் நினைவால் வாழ்கிறோம்…
கொடுத்த வள்ளல்
உங்கள் நினைவாகவே வழங்குகிறோம்…
நீங்கள்
வாழ்ந்து காட்டிய
வழி நடந்து
அம்மாவின் ஆசியுடன்
மக்களோடு
மக்களாக
மக்களுக்காக…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
என் அன்பிற்கினிய மக்களே…
காணும் பொங்கலில்…
முக நக…
அக நக…
நட்பு கண்டு,
உறவு கண்டு,
உள்ளம் உவந்து…
பரஸ்பர நட்பு பாராட்டி மகிழ்ந்திருக்க
மனதார வாழ்த்துகிறேன்…
மகிழ்வான மக்களே
மகத்தான சமூகத்தின்
சிற்பிகள் ஆவர்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
என் அன்பிற்கினிய மக்களே…
உழவும்
உற்பத்தியுமே
உயர்வுக்கு வழி…
உழவுக்கு நன்றி சொல்லி,
உலகத்திற்கே உணவளிக்கும்
உழவருக்கு நன்றி சொல்லி…
ஊர் உயர
உழவர்கள் உயர
எல்லோரும்
எல்லா
வளமும் பெற்று
வாழ்வாங்கு வாழ
மாட்டுப் பொங்கல் மற்றும்
உழவர் தின வாழ்த்துகளுடன்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
எம் மக்களுக்கான…
ஆரோக்கியத்… தை..,
நலத்…தை,
வளத்…தை,
உற்சாகத்…தை,
ஊக்கத்… தை,
ஏற்றத்…தை,
சுபிட்சத்…தை,
வளர்த்து வளமாய் வாழ…
என்றென்றும் என் பணியில்
இயங்கிக் கொண்டே இருப்பேன்…
என் அன்பிற்கினிய மக்களே…
பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுடன்
மகிழ்வான காலை வணக்கங்கள்…
பயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல
பயனற்ற எண்ணங்களை நீக்கி…
மாசில்லா மனதுடன்
குறையில்லா அன்புடன்
களங்கமில்லா நட்புடன்
என்றும் மாறா விசுவாசத்துடன்
புகையில்லா போகியுடன்
எந்த இக்கட்டான சூழ்நிலையையும்
கடந்து மீண்டெழும் விரிதிறனே
மனித குல பரிணாம வளர்ச்சியின்
முக்கிய அங்கம்….
எல்லா கால கட்டத்திலும்,
வளர்ச்சிக்கான வாய்ப்புகள்
கொட்டி கிடக்கின்றது…
உள் கடந்து,
உண்மையின் துணை கொண்டு…
சற்றே உற்று நோக்குங்கள்…
வாய்ப்புகளை கண்டறிதலும் – அதை வசப்படுத்தி வளர்ச்சி காண்பதும் – நம் வாழ்க்கையின் அங்கம் ஆகட்டும்…
100 அடி தூரம் ஆயினும்,
ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,
முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும்
அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும்.
அதைப்போலவே
எந்த இலக்காக இருந்தாலும்
தீர்க்கமான தொடக்கமும்,
தொடர்ச்சியான முயற்சியும்
மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.
தொடங்குங்கள்;
தொடருங்கள்;
சிகரம் தொடுங்கள் !
புத்தம் புதிய எண்ணங்களுடன்
புதிய நம்பிக்கையுடன்
புதிய திட்டங்களுடன்
புதிய இலக்குகளுடன்
புத்தம் புதியதாய் ஓர் ஆண்டு…
வாழ்வு வளம் பெறட்டும்
எண்ணங்கள் எழுச்சி பெறட்டும்
வாழ்வு வண்ண மயம் ஆகட்டும்…
புத்தாண்டு தின வாழ்த்துக்களுடன்
கொடுங்கள்…
கொடுத்துக்கொண்டே இருங்கள்…
உழைப்பை கொடுங்கள்…
நேரத்தை கொடுங்கள்…
அறிவை கொடுங்கள்…
அன்பை கொடுங்கள்…
ஆற்றலை கொடுங்கள்…
அனைத்தையும் கொடுங்கள்…
இவ்வையகம் வாழ்வாங்கு வாழட்டும்…
கொடுங்கள், கொடுக்கப் படுவீர்கள்…
கொடுப்பவருக்கே இங்கு அனைத்தும் கொடுக்கப்படும்…
உழைப்பு நம் தேவையைப் பூர்த்தி செய்கிறது…
தேவையைப் பூர்த்தி செய்த பின்பும்
தொடரும் உழைப்பு சேவை ஆகிறது…
தொடரட்டும் உழைப்பு…
மலரட்டும் சேவை…
மகிழட்டும் உலகம்…
கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டாராம் !
ஆனால் கண் கண்ட தெய்வம் அல்லவா நீர் !!
என்றும் ஏழை எளியோருக்காக துடித்த இதயம் – நம் இதய தெய்வம்.
என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து
எம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வமே…
வாழும் போதும் உங்கள் நினைவே…
வழங்கும் போதும் உங்கள் நினைவே…
உங்கள் நினைவே என் பலமாய்…
நல்லோர் பலரின் துணையுடன்…
அம்மாவின் ஆசியுடன்…
ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்…