Menu Close

காலை வணக்கம்

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள்.

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள்.

எதை நீங்கள் அடைய வேண்டுமோ அதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
முடிந்தவரை எதிர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தராமல் நேர்மறையான எண்ணங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள்.

இறைவனிடம் உங்கள் பிரார்த்தனைகளை நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் உங்கள் மனம் முழுவதும் எதைப்பற்றிய நினைவுகளால் நிரம்பி இருக்கிறதோ அது ஒரு நாள் நிச்சயமாக உங்களைத் தேடி வரும்.

இந்த பிரபஞ்சம் அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
ஆகவே நினைத்ததை அடையும் வரை விடாமல் முயற்சியுங்கள்.
சிந்தனையை தெளிவாக்குங்கள்.
நல்லதையே எண்ணுங்கள்.
நல்லதே நடக்கும் .

உங்களுக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கும்.
உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.
அபரிமிதமான வளர்ச்சி அடைந்து சிறப்பாக வாழ்வீர்கள்.
நம்பிக்கையுடன் கூடிய முயற்சி வானத்தையும் வசப்படுத்தும்.
நம்புங்கள். நன்றாக வாழ்வீர்கள்.

மாற்ற முடிந்ததை மாற்றுங்கள். மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

இறைவன் தந்த இந்த அழகிய வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்ற பொக்கிஷம்.

அந்தப் பொக்கிஷத்தை நம்மில் எத்தனை பேர் சரியாக பயன்படுத்துகிறோம் என்பதுதான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

சில நேரங்களில் மற்றவர்களை மாற்ற முயற்சிக்காமல்
நம் எண்ணங்களை மட்டும் சரி செய்தால் போதும் நம் வாழ்க்கையே சரியாவதை உணர முடியும்.
பிரச்சினைகளைப் பற்றிய அதீத சிந்தனைகளை நிறுத்தினாலே போதும்.
பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தானே கிடைக்கும் .

ஏனென்றால் அங்கு பிரச்சனையே நமது தேவையற்ற சிந்தனைகளும் குழப்பங்களுமாகத்தான் இருக்கும்.

எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையும் அழகாக மாறுவதை உணர்வீர்கள்.

மாற்ற முடிந்ததை மாற்றுங்கள்.
மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

திருப்தியான நிறைவான வாழ்க்கையை வாழ்வதாக உணர்வீர்கள்.
இது இறைவன் தந்த வாழ்க்கை.

அவர் பார்த்துக் கொள்வார்.
தேவையற்ற சிந்தனைகள் எனும் சிறிய வட்டத்திற்குள் சிக்கி உங்கள் வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே .
வாழ்ந்து பார்த்து விடுங்கள்.

நம்பிக்கையோடு செய்கின்ற பிரார்த்தனைகள் என்றும் வீணாவதில்லை.

நம்பிக்கையோடு செய்கின்ற பிரார்த்தனைகள் என்றும் வீணாவதில்லை.

உங்களுக்குள் உள்ள இறைவனிடம் உங்கள் பிரார்த்தனைகளை நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

சரியான நேரம் வரும் வரை பொறுமையுடன் காத்திருங்கள்.
நிச்சயமாக ஒருநாள் அவை அனைத்தும் நிறைவேறி சிறப்பாக வாழ்வீர்கள்.

உங்கள் நம்பிக்கையும் முயற்சியும் என்றும் வீணாகாது. கண்டிப்பாக பல மடங்கு பலன்களை தரும்.
எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வர வேண்டும்.

உங்களுக்கான நேரமும் வரும்.
உங்கள் இன்றைய நிலையை வைத்து நாளைய வாழ்க்கையை நிர்ணயித்து விடாதீர்கள். எல்லாம் மாறும்.

வாழ்க்கை எந்த நொடியிலும் நீங்கள் நினைத்துக் கூட பார்த்திராத
பேரதிசயத்தை நிகழ்த்தலாம்.
நம்புங்கள்… நன்றாக வாழ்வீர்கள்!

இன்று ஒரு புதிய அழகான அற்புதமான நாள் . உங்கள் கைகளில் இறைவன் கொடுத்துள்ளார்.

இன்று ஒரு புதிய அழகான அற்புதமான நாள் .
உங்கள் கைகளில் இறைவன் கொடுத்துள்ளார்.

இந்த நாளை முழுமையாக அற்புதமான நாளாக மாற்றுவது உங்கள் கைகளில்தான் உள்ளது.
இன்றைய நாளை உங்களால் பார்க்க முடிகிறது.

இன்றைய நாளில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் இறைவன் வழங்கியுள்ளார்.
இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்து
” நான் கொடுத்து வைத்தவர்” என்பதை முதலில் நம்புங்கள்.

உங்களிடம் இல்லாத ஒன்றை தேடித்தேடி கவலைப்படாமல்
இருக்கும் அனைத்திற்கும் முதலில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் பல பேரின் பல நாள் கனவுகளாக இருக்கலாம்.
உங்களது மகிழ்ச்சி முழுமையாக உங்கள் கைகளில்தான் உள்ளது.
அதை வெளியே தேடாதீர்கள்.

மகிழ்ச்சியான உள்ளமே இறைவன் வாழும் கோவில்.
உங்களுக்குள் நிறைந்துள்ள இறைவனை போல மகிழ்ச்சியும் உங்களுக்குள் நிறைந்துள்ளது.

அதை உணரும் பொழுது உங்கள் வாழ்க்கை இன்பமயம் ஆகும்.
வாழ்வில் எதற்கும் சோர்ந்து விடாதீர்கள்.
நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இறைவன் உங்களுடன் சேர்ந்து உங்களை வழி நடத்திச் செல்கிறார்.

உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
இந்த நிமிடம் இதை உங்களால் உணர முடிகின்றது.
நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை வளமாகும்

வாழ்க்கை ஒரு வரம். வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம்.

வாழ்க்கை ஒரு வரம்.
வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம்.

முடிந்த வரை செல்லும் பொழுதே சிறப்பாக வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள்.
ஏனென்றால் இன்றைய நாள் இந்த நொடி மீண்டும் வரப்போவதில்லை.

வாழ்வில் தேங்கிக் கிடக்கும் குட்டை போல ஒரே இடத்தில் ஒரே சிந்தனையில் தேங்கிக் கிடக்காமல்
ஓடும் நதி போல சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு ஓடிக் கொண்டே இருங்கள்.

அப்போது வாழ்வின் ஒவ்வொரு நாளும் மிகவும் அழகாகும்.
வாழ்வில் ரசிக்க வேண்டிய தருணங்கள் எவ்வளவோ உள்ளன.

உங்களை காயப்படுத்திய அதே தருணங்களை
மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்காமல்
முடிந்தவரை அழுது விட்டு மீண்டும் எழுந்து நில்லுங்கள்.

எழும் போது பழைய சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு
புதிய சிந்தனைகளுடன் கூடிய தெளிவுடன் எழுந்து நில்லுங்கள்.

உங்களை வெல்ல யாராலும் முடியாது.
அப்போது உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.

உங்கள் கைகளில் இருக்கும் வரை தான் உங்கள் பிரச்சனைகள் பெரிதாக தெரியும்.

இந்த உலகில் இறைவன் நினைத்தால் இயலாத செயல் என்று எதுவும் இல்லை.

ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் சோதனை காலங்களில் இறைவனிடம் சரண் அடைவதை விட்டுவிட்டு கவலைகளையும் துன்பங்களையும் நாமே தூக்கி சுமக்கின்றோம்.

உங்கள் மனதால் சுமக்க முடியாத சுமைகள் வாழ்வில் வரும் பொழுது அதை இறைவனிடம் இறக்கி வைத்து விடுங்கள்.

உங்கள் கைகளில் இருக்கும் வரை தான் உங்கள் பிரச்சனைகள் பெரிதாக தெரியும்.

இறைவனின் கரங்களுக்கு சென்றுவிட்டால் அனைத்தையும் விட இறைவன் மிகப் பெரியவன்.
அவரால் விதியையும் கூட மாற்ற முடியும்.

உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நொடி போதும்.
ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும் இறைவனை நம்பி..

இறை சிந்தனையுடனும், நம்பிக்கையோடும்,

நல்ல எண்ணங்களுடனும், நேர்மறையான சிந்தனையுடனும் வாழ்க்கையை வாழுங்கள்.

உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்

பிரபஞ்ச சக்தி என்பது ஒரு பேராற்றல். அதில் மனிதர்கள் பேராற்றலின் உச்சம்.

பிரபஞ்ச சக்தி என்பது ஒரு பேராற்றல்.
அதில் மனிதர்கள் பேராற்றலின் உச்சம்.

நமக்குள் உள்ள ஆற்றலை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது நமது வாழ்க்கை.

ஒன்றை அடைய வேண்டும் என்றால் பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான புரிதல் தேவையில்லை.

நம்பிக்கையும் விடாமுயற்சியும்
நேர்மறையான சிந்தனைகளுமே போதும்.
ஏனென்றால் பிரபஞ்சம் என்பது தனியான ஒன்றல்ல.
பிரபஞ்சத்தின் ஒரு பகுதி தான் நாம்.

நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பிரபஞ்ச ஆற்றலே.
இங்கு நமது தேடல்கள் அனைத்தும் நம்மில் தான் தொடங்குகின்றது.
மீண்டும் நம்மில் தான் முடிகின்றது.

நாம் வெளியே தேடித்தேடி வணங்கும் இறைவனும் நமக்குள் தான் உள்ளார்
இதை சரியாக உணர்ந்தவர்கள் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை பெறுகிறார்கள்.

நல்லதையே எண்ணுங்கள். நல்லதே நடக்கும்.

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது புது நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.
மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள்.
உற்சாகமாக இருங்கள்!

எதை நீங்கள் அடைய வேண்டுமோ அதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
முடிந்தவரை எதிர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தராமல் நேர்மறையான எண்ணங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள்.

ஏனென்றால் உங்கள் மனம் முழுவதும் எதைப்பற்றிய நினைவுகளால் நிரம்பி இருக்கிறதோ அது ஒரு நாள் நிச்சயமாக உங்களைத் தேடி வரும்.

இந்த பிரபஞ்சம் அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
ஆகவே நினைத்ததை அடையும் வரை விடாமல் முயற்சியுங்கள்.
சிந்தனையை தெளிவாக்குங்கள்.
நல்லதையே எண்ணுங்கள்.
நல்லதே நடக்கும்.
உங்களுக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கும்.

உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறி… அபரிமிதமான வளர்ச்சி அடைந்து… ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றிட வாழ்த்துக்கள்

உங்களுக்கு வேண்டியதை பிரபஞ்சமே உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்..

உங்கள் வாழ்க்கை இனிக்க வேண்டும் என்றால் நீங்கள் கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களையும் கற்பனைகளையும் விட்டு விட்டு நிகழ்காலத்திற்க்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும்.
வேண்டாததை விட்டு விட்டு உங்களுக்கு வேண்டியதை மட்டுமே நினைக்க வேண்டும்.
தேவையற்ற கற்பனைகளுக்கும் பயத்திற்கும் முக்கியத்துவம் தராமல் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ
அதைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டும்.
உங்களுக்கு வேண்டியதை ஏற்கெனவே பெற்று விட்ட நபர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் வருத்தப்பட்டாமல் வாழ்த்தி மகிழ கற்றுக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் பாருங்கள்.
உங்கள் வாழ்க்கை மாறுவதை உங்களால் உணர முடியும்.
அனைத்தையும் விரும்புங்கள்.
உங்களுக்கு வேண்டியதை அதிகமாக விரும்புங்கள்.
தினமும் அதை அடைய ஒரு சிறு முயற்சியாவது செய்யுங்கள்.
உங்களுக்கு வேண்டியதை பிரபஞ்சமே உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்

வாழ்க்கையில் எல்லாமும் இருந்தால்தான் சுவாரஸ்யமாக வாழ முடியும்

வாழ்க்கையில் எல்லாமும் இருந்தால்தான் சுவாரஸ்யமாக வாழ முடியும்
ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம்,
குதூகலம், அழுகை, சிரிப்பு,
வேகம், விவேகம்,
போற்றுதல், தூற்றுதல்,
அன்பு, ஆனந்தம்,………
இப்படி அனைத்தும் கலந்த கலவையே வாழ்க்கை
இதுதான்
இப்படித்தான்
என்பது எதுவும் இல்லை
எது எப்படியோ…
அது அப்படித் தான்…
என்ற ஏற்புத்தன்மையே வாழ்வை வசந்தமாக்கும்
ஒருவருக்கு இது தான் சிறந்தது என்பது
வேறொருவருக்கு அப்படியே சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்க முடியாது
அவருக்கு வேறொன்று சிறப்பானதாக இருக்கலாம்
அது அவரை நல் வழிப்படுத்தி உயர்வுக்கு இட்டுச்செல்லலாம்
நமக்கு தெரிந்ததை
அது தான் சிறப்பு என்று மற்றவருக்கு திணிக்க முனையும் போது தான்
சிக்கல்களும் விரிசல்களும் உருவாகிறது
அனைத்தும் அனைவருக்கும் அறிந்து கொள்ளும் காலம் நிச்சயம் இயற்கை கொடுக்கும்
ஆக…
அனைத்தையும் ஏற்று ஆனந்தமாக வாழ்வோம்

வாழ்க்கை நமக்கு என்ன கொண்டு வருகிறது என்பதும் நம் கையில் இல்லை

வாழ்க்கை நமக்கு என்ன கொண்டு வருகிறது என்பதும் நம் கையில் இல்லை
அடுத்த நொடி என்ன நிகழும் என்பதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை
ஆனால் நம்முடைய ஒவ்வொரு நாள் முடிவிலும் எவற்றை பாதுகாப்பாக நம்முடைய நினைவில் வைத்துக் கொள்கிறோம்
எவற்றை தவிர்க்க முடியும் என்பது நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது
ஆகவே மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது
நம் கையில் தான்,
நம் மனதில் தான்,
நாம் பார்க்கும் கோணத்தில் தானே தவிர
இதற்கு மற்றவர்கள் யாரும் பொறுப்பு அல்ல
சிறப்பான கண்ணோட்டம் கொண்டு கையாளும் திறனை வளர்த்து கொள்வோம்
நிறைவான மனதோடு வாழ்வோம்
வாழ்க வளமுடன்

முயற்சிகளால் ஏற்படும் வெற்றி… இலட்சிய தீபமாய் நமக்கு வழிகாட்டும்…

சக மனிதர்களிடையே
நம்பிக்கை கொள்வோம்…

உள்ளங்களை
ஊக்குவித்து
உற்சாகப்படுத்துவோம்…

ஒவ்வொரு
முயற்சிகளால் ஏற்படும்
வெற்றியும்
இலட்சிய தீபமாய்
நமக்கு வழிகாட்டட்டும்…

ஒவ்வொரு கணமும் சுற்றி இருக்கும் மக்களிடம் மட்டுமல்லாமல்…

கவனம்…
நம் பொறுப்பும்,
இருப்பும்,
சொல்லும்,
செயலும்,
பார்வையும்,
நடத்தையும்,
சிந்தனையும்
ஒவ்வொரு கணமும்
சுற்றி இருக்கும்
மக்களிடம் மட்டுமல்லாமல்…

இந்த பிரபஞ்சத்திடமும் பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது…

அதன் விளைவே
நம் வாழ்க்கையாய் வெளிப்படுகிறது…

உங்கள் கடமையை பூர்த்தி செய்து காத்திருங்கள்… இறையும் பிரபஞ்சமும் தன் கடமையை செவ்வனே ஆற்றட்டும்…

எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையையும்
நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடிய
சாதுரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்…

நல்லதொரு எதிர்காலத்திற்கு
நிகழ்காலத்தில் தயாராகுங்கள்…

ஆகச் சிறந்த மனிதகுலம்
ஆவது அறியாமல் தேங்கிக் கிடக்க வேண்டாம்…

உங்கள் கடமையை பூர்த்தி செய்து காத்திருங்கள்…
இறையும் பிரபஞ்சமும் தன் கடமையை செவ்வனே ஆற்றட்டும்…

அதில் இந்த சமூகமும் உலகமும் புதுப்பொலிவு பெறட்டும்…

ஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்… யார் ஒருவரின் தோல்வியும் சமூகத்தின் தோல்வியே…

இந்த உலகமும் சமூகமும் ஒருவரால் இயக்கப்படுவதல்ல !
ஒவ்வொருவராலும் இயங்குவது…

ஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்…
யார் ஒருவரின் தோல்வியும் சமூகத்தின் தோல்வியே…

சரித்திர சாதனைகள்
எதுவும் சாவகாசமாக நிகழ்த்தப்பட்டதல்ல…
இக்கட்டான சூழலும், மனிதகுலத்தின் தேவையுமே
பல சாதனைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் வித்திட்டுள்ளது…

இந்த சூழ்நிலையிலும்…
பூமியை பிளந்து எழும் விதைகளாக வெடித்து எழுவோம்…
நம்முடைய வெற்றி இந்த சமூகத்தின் வெற்றியாக முழுமை பெறட்டும்…

Powered by J B Soft System, Chennai.