Menu Close

காலை வணக்கம்

எண்ண ஓட்டத்தை கூர்ந்து கவனியுங்கள்… அதில் உதித்தெழும் திட்டங்களை தேர்ந்தெடுங்கள்…

நிறைவேற்றக்கூடிய சக்தி இல்லாத
எந்த திட்டங்களையும்
கடவுள் நம் மனதில் தோற்றுவிப்பதில்லை…

எண்ண ஓட்டத்தை கூர்ந்து கவனியுங்கள்…
அதில் உதித்தெழும் திட்டங்களை தேர்ந்தெடுங்கள்…
மெருகேற்றுங்கள்…
செயலாற்றுங்கள்…
நிறைவேற்றுங்கள்…

புது உலகம் படைக்கப்படட்டும்…
உங்களால் உங்களுக்காக…

மாற்றம் ஒன்றே மாறாதது… மாற்றம் இல்லாமல் ஏற்றம் இல்லை… ஏற்றம் பெற மாற்றம் காணுங்கள்…

விதையை இழக்காமல்
விருட்சம் இல்லை…

உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாக மாறுகிறது…

மாற்றம் ஒன்றே மாறாதது…
மாற்றம் இல்லாமல்
ஏற்றம் இல்லை…

ஏற்றம் பெற
மாற்றம் காணுங்கள்…

எம் மக்களாகிய உங்களின் முயற்சியிலும் முன்னேற்றத்திலும் என் பங்கு எப்போதும் இருக்கும்…

ஒருவரின் பெருமைக்கும் அவரின் சிறுமைக்கும் அவரவரின் செயல்களே காரணமாகிறது…

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

ஒருவரின் பெருமைக்கும்
அவரின் சிறுமைக்கும்
அவரவரின் செயல்களே காரணமாகிறது…

யாரையும் வாழ்த்துவது உங்களை உயர்த்தும்…
யாரையும் தூற்றுவது உங்களையே தாழ்த்தும்…

ஊரும் உலகமும் உங்கள் சொத்து…
சுற்றமும் நட்பும் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு…

உங்களின் நிலை அறிந்து சிந்தியுங்கள்…
உங்களின் பெருமை அறிந்து செயலாற்றுங்கள்…

விதையாய் விழுவோம்… விருட்சமாய் எழுவோம்…

வறண்ட
நிலத்தில் சுரண்டினால்
வாழ்க்கை கூட மிஞ்சாது…

வளமாய் மாற்றுவோம்…
மண்ணையும், மக்கள் மனதையும்…

விதையாய் விழுவோம்…
விருட்சமாய் எழுவோம்…

வாழ்வோம்…
வாழ வைப்போம்…

சிந்தனையை செயல் ஆக்குவோம்… சொல்லை செயல்படுத்துவோம்…

ஆயிரம் சொல்லை விட ஒரு செயல் பெரியது…
சிந்தனையை செயல் ஆக்குவோம்…
சொல்லை செயல்படுத்துவோம்…
செயலே முன்னேற்றத்தைத் தரும்…
செயலே உருவாக்கும்…
செயலே நிகழ்த்திக் காட்டும்…
அச்செயல் நற்செயலாக இருக்கட்டும்…
அச்செயல் நற்பலன்களை தரட்டும்…

கொடுப்பவருக்கே இங்கு அனைத்தும் கொடுக்கப்படும்…

கற்றதையும் பெற்றதையும்
கொண்டு நற் காரியங்கள்
செய்வீர்…

கற்றதை பகுத்தறியுங்கள்…
பெற்றதை பகிர்ந்து அளியுங்கள்…

கொடுக்க, கொடுக்க
வளர்வது இறையின் கொடை…

கொடுப்பவருக்கே
இங்கு அனைத்தும்
கொடுக்கப்படும்…

இது அறிந்து,
அறிய வைக்க வேண்டிய
இயற்கையின் இரகசியம் !

கருத்துக்கள் மாற சிந்தனைகள் மாறும்…

பார்வைகள் மாறட்டும்…
பணம் பற்றி…
உழைப்பு பற்றி…
உயர்வு பற்றி…
வெற்றி நிலைகுறித்து…
பார்வைகள் மாறட்டும்.

கோணங்கள் மாற…
காட்சிகள் மாறும்.
காட்சிகள் மாற…
கருத்துக்கள் மாறும்.

கருத்துக்கள் மாற
சிந்தனைகள் மாறும்…

சிந்தனைகள் மாற
செயல்களும் மாறும்…

சிந்தனைகளும்
செயல்களும் மாற
சமூகமும் மாறும்…

சமூகம் மாற
புது உலகு பிறக்கும்…
பார்வைகள் மாறட்டும்
புது உலகு பிறக்கட்டும்…

நாம் என்ன செய்கிறோம் என்பதை விட…

நாம்
என்ன செய்கிறோம்
என்பதை விட…

எப்படி செய்கிறோம்
என்பதைவிட…
ஏன் செய்கின்றோம்
என்ற கேள்விக்கான
விடையே
நம் முன்னேற்றத்திற்கான
திசையை தீர்மானிக்கிறது!

கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…

நடப்பது நடக்கட்டும் என
கடவுளை நம்புவதாக சொல்லி
கடமை மறந்து உழைக்காமலிருப்போரை
கடவுள் ஒருநாளும் காப்பதில்லை…

நடப்பது நடக்கட்டும்
என் கடன் பணி செய்து கிடப்பதே என
அனுதினமும் கடமை ஆற்றுவோரை
கடவுள் ஒருநாளும் கைவிடுவதில்லை…

கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர
கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…

*நடப்பது நடக்கட்டும்…*
*நம் பணி தொடர்ந்து செய்வோம்…*

நமக்கு கிடைத்த ஒவ்வொன்றும் இயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது…

பெறுபவர் என்று ஒருவர் இல்லாமல் கொடுக்க முடியாது…
கொடுப்பவர் என்று ஒருவர் இல்லாமல் பெற முடியாது…

நமக்கு கிடைத்த ஒவ்வொன்றும்
இயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது…

நமக்கு கொடுத்ததெல்லாம்
கொடுப்பதற்காகவே கொடுக்கப்பட்டது…

கொடுத்துக்கொண்டே இருங்கள்…
உழைப்பை கொடுங்கள்
அறிவைப் பகிர்ந்து கொடுங்கள்…
நல் வார்த்தைகளை கொடுங்கள்…
நல் நம்பிக்கையை கொடுங்கள்…

இங்கே கொடுப்பவருக்கே அனைத்தும் கொடுக்கப்படுகிறது !
கொடுங்கள், கொடுத்துக்கொண்டே இருங்கள்…

நம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

உலகத்தின் இயல்பு உங்களை மாற்றாமல் இருக்கட்டும்…

எவ்வளவு நேரம் தேக்கினாலும்
ஓடும் இயல்பை மறப்பதில்லை
-தண்ணீர்.
உலகத்தின் இயல்பு
உங்களை மாற்றாமல் இருக்கட்டும்…
உங்களின் இயல்பால் இந்த
உலகம் உயர்ந்து நிற்கட்டும்…

நம்முடைய உடனடித் தேவை… சிந்தனை சீர்திருத்தம்…

நம்முடைய உடனடித் தேவை…
சிந்தனை சீர்திருத்தம்…
நமது பொறுப்புகள் அறிவோம்…
நமது பொறுப்புகளின் முழு கடமைகள் தெரிவோம்…
தற்போதைய பொறுப்புகள் அறிந்து,
சூழ்நிலைகளின் தாக்கத்தை கடந்து,
செவ்வனே கடமைகள் புரிவோருக்கு…
அடுத்தடுத்த பொறுப்புகள்
இயல்பாகவே வந்து அவரை அலங்கரிக்கும்…

நம் முதிர்ச்சி நிலை… குன்றின் மேலிட்ட விளக்காய்… இந்த சமூகத்திற்கு பயன் தரட்டும்…

அறிந்தது…
தெரிந்தது…
புரிந்தது…
கல்வி…
ஞானம்…
ஆற்றல்…

இவைகளைத் தாண்டி
இப்போதைய உடனடி தேவை
சமயோசித அறிவும்…
முதிர்ச்சி நிலையும்…

நம் முதிர்ச்சி நிலை…
குன்றின் மேலிட்ட விளக்காய்…
இந்த சமூகத்திற்கு பயன் தரட்டும்…

நல்லவர்கள் வல்லவர்களாகவும்,
வல்லவர்கள் நல்லவர்களாகவும்,
பரிணமிக்கட்டும் !

வளர்ச்சி என்பது வார்த்தையாக மட்டும் இல்லாமல் செயல்படும் போது மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியமாகும்

வளர்ச்சி என்பது
வார்த்தையாக மட்டும் இல்லாமல்
செயல்படும் போது மட்டுமே
வளர்ச்சி என்பது சாத்தியமாகும்…
போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்…
பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்…
நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல!
உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…
வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டெடுப்போம்…
புது வாய்ப்புகளை உருவாக்கி
புது வாழ்வை கட்டமைப்போம்…

வாழ்க்கையின் ஓட்டத்தில் தடை கற்களாக தென்படும் ஒவ்வொன்றையும் சற்றே உற்று நோக்குங்கள், வேறு கோணத்தில் பாருங்கள்…

வாழ்க்கையின் ஓட்டத்தில்
தடை கற்களாக தென்படும்
ஒவ்வொன்றையும்
சற்றே உற்று நோக்குங்கள்,
வேறு கோணத்தில் பாருங்கள்…

அவை உங்களை
தடுத்து வீழ்த்தும் தடை கற்கள் அல்ல
உயர்த்தி நிறுத்தும் படிக்கற்கள்
என்பதை கண்டறிவீர்கள்…

Powered by J B Soft System, Chennai.