தேடலும், தேவையும் தீர்வதேயில்லை; மனிதவாழ்வில்.
எதிர்பார்ப்பின்றி, ஏமாற்றங்களின்றி வாழ்க்கை துவங்குவதுமில்லை, முடிவதுமில்லை.
எதிர்கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தான் அனைத்தும் அடங்கியுள்ளது.
சூழ்நிலைகளை அனுசரிக்க பழகிக் கொண்டால் இவ்வுலகம் உங்களுக்கு பூஞ்சோலை தான்.
அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன்…. ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து விடக் கூடாது….
என்ன நடந்தாலும் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வாழப் பழகி விட வேண்டும்.
நிஜங்களுக்கும்,
நிழல்களுக்குமிடையே
நிலைதடுமாறும்
வயது..!
நம்பிக்கைகளுக்கும்
சந்தேகங்களுக்கு
மிடையே
சஞ்சலப்படும் மனது…!
அன்புக்கு
அதிகபட்ச விலையாய்
அழுகையை தரும்
மனிதர்கள்…!
கன்னத்தில் வழியும்
கண்ணீரைக் கண்டு
கைதட்டிச் சிரிக்கும்
உலகம்..!
விரல்பிடித்து
நடப்பதாய்
விளக்கம்
சொல்லிவிட்டு
விலகிச் செல்லும்
சிலர்…!
கண் மூடினால்
தெரியும்
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும்
கண்கள்…!
முயன்றாலும்
கிடைக்காததை
முழுமுயற்சியோடு
தேடும் முட்டாள்தனமான
சில தேடல்கள்…!
சந்தோஷங்களை
பறித்துவிட்டு
கண்ணீரை மட்டும்
தரும் காலச்சக்கரம்…!
இதுதான் வாழ்க்கை
என்றில்லை…!
இவ்வளவுதான்
வாழ்க்கை…!!!
ஒரு நொடியில் மாறலாம்…
*************************************
பிரிந்து போனவர்களையும்
பிரித்து வைத்தவர்களையும்
நீங்கள் விமர்சிக்காதீர்கள்..!!
அவர்களின் விதியை
உங்கள் கையால் – நீங்கள்
எழுத விரும்பாதீர்கள்..!!
உங்களின்
ஒரு நொடி புன்னகை கூட
ஒரு துளி விஷம் ஆகும் –
அடுத்தவர் துன்பத்தில் – நீங்கள் புன்னகைக்கும் பொழுது..!!
உங்களின்
ஒரு துளி கண்ணீர் கூட
ஒரு நொடி புனிதம் ஆகும் – அடுத்தவர் துன்பத்தில் நீங்கள் அழும் பொழுது..!!
எல்லாவற்றிற்கும்
காரணம்
தேடிக்கொண்டே
இருந்தால்..
வாழ்க்கையை
ரசிக்க முடியாது..
அது அது வழியே
கடந்து போவது
தான்….
வாழ்வின் சுவாரஸ்யமே..!
சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..
உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்..
உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..
உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..
உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..
உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்..
உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்..
உங்களைத் தூற்றுவோரும் வாழ்த்தும்படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்.
மகிழ்வித்து மகிழுங்கள்….
உங்கள் வெற்றிகளை விதி எனும் கதவு மூடினால் நம்பிக்கை எனும் சாவி அந்த கதவை திறக்கும். நம்பிக்கை வையுங்கள் அதன் பலன் நிச்சயம் உண்டு…
உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது.
எனவே உங்கள் எண்ணங்களும் செயல்களும் தூய்மையானதா ? என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
தோல்வி உங்களை அடுக்கடுக்காக தாக்கினால், மனம் தளராமல் உங்கள் முயற்சியை அடுக்கடுக்காக எடுத்து வையுங்கள்.
ஒரு நாள் நீங்கள் எடுத்த முயற்சி கோபுரம் ஆகும், வெற்றி உங்கள் மகுடம் ஆகும்.
சொல்ல முடியாத
சோகங்களும்…
வெல்ல முடியாத
வாதங்களும்…
பேச முடியாத
வார்த்தைகளும்…
மறக்க முடியாத
நினைவுகளும்
கொண்டது தான்…
மனித வாழ்வு!
குத்திக் கிழிக்கிற முள்ளளாகி இருந்தாலும் சரி, குத்திக்காட்டுற மனிதராக இருந்தாலும் சரி, எப்பவும் தூக்கி ஓரத்துல போட்டுடனும்.
இல்லையெனில் நாளைக்கு, நம்பளதான் மறுபடியும் காயப்படுத்தும்.
உங்கள் பின்னால் நிற்கிற எல்லோருமே உங்களை நேசிக்கிறவர்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.
அதில் எத்தனைப்பேர் உங்கள் முதுகில் குத்தப்போகிறார்கள் என்பது இப்போது தெரியாது.
தராசிற்கு நியாயமெல்லாம் தெரியாது எந்த பக்கம் கனமிருக்கிரதோ அந்த பக்கம் சாய்ந்து விடும். அப்படி தான் சில
மனிதர்களும்.
பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது.
பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து விடும். தேங்கிய நீர் தூய்மையிழந்துவிடும். சுறுசுறுப்பான செயல்பாடுகளற்று முடங்கிய மனம் தன் வலிமையை இழந்துவிடும்.
ஏமாற்றம் என்பது வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கே.
பக்குவமாக அதிலிருந்து மீண்டு விட்டால் வாழ்வை கற்று விடலாம்.
காலம் பதில் அளிக்கும் என்று கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை. பிரச்சனைகளை கண்டு காலத்தை குறை சொல்லி நாம் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை.. துணிந்து செல்பவனுக்கு எப்போதும் வெற்றி தான்.
நீங்கள் எதை அதிகம் நேசிக்கிறீர்களோ
அதை வைத்துதான் கடவுள் உங்களை அதிகம் சோதித்திருப்பார் கவலை கொள்ளாதீர்கள்.
சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை.
ஏதோ ஒரு காரணத்தால் இறைவன் உங்களை காப்பாற்றி இருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் ‘நான் நம்பும் இறைவன் என்னை காப்பார்’ என்ற நம்பிக்கையுடன் கடந்து செல்லுங்கள். உங்கள் நம்பிக்கை உங்களை கைவிடாது.
உண்மையில் உனக்கு எதிரி உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.
நானும், என்னை சார்ந்தவர்களும்
ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக விதையுங்கள்.
அந்த எண்ணமே அதற்கான சூழ்நிலையையும் செயலையும் தானாக உருவாக்கும்.
– அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி.
எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.
யார் ஒருவர் மற்றவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ, அவர் நன்றாகவே இருப்பார். இதைப் பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்.
காலம் பறக்கும் என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கையின் பைலட் நாம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நேரத்தை மாற்றிக் கொள்ளுங்கள்……..
நேரம் என்பது நாம் உருவாக்குவது,* எனக்கு நேரமில்லை என்று சொல்பவன் அதை விரும்பவில்லை என்று நினைக்கிறான்……
இரண்டு சக்தி வாய்ந்த போர்வீரர்கள்* நேரம் மற்றும் பொறுமை, தயக்கமின்றி அமைக்கப்பட்டதைச் செய்யுங்கள்…….
பிறரை கெடுத்து
வாழ்வதை விட..
பலருக்கு
கொடுத்து வாழ்வதே
நல்ல வாழ்க்கையாகும்..
கொடுப்பதற்குரியது
பணம் மட்டுமல்ல..
உன்
வார்த்தையும் ஒருவருக்கு
தாகம் தணிக்கலாம்..
உன்
புன்னகையும் ஒருவர்
உள்ளத்தில் விளக்கேற்றலாம்..
உன்
அன்பும் ஒருவரை
மனிதனாய் வாழவைக்கலாம்!
காரணமின்றி ஒருவன் உன்னை அவமானப் படுத்துகிறான் என்றால்,
உன் பாவத்தை அவன் மொத்தமாக குத்தகை எடுப்பதற்கு நிகர். உனக்கு சுபிட்சம். அவனுக்கு பெரும்கேடு.
உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. உன் வழிகளில் நீ உண்மையாக இரு.
எத்துயர் வரினும் அத்துயர் போக்கி புத்துயிர் அருளும் இறைவன் உன்னோடு பயம் கொள்ளாதே.
மலையளவு துயர் வரினும் மாமருந்தாய் காத்து நிற்பவன் இறைவன் ஒருவனே
நீங்கள் எதை அதிகம் நேசிக்கிறீர்களோ
அதை வைத்துதான் கடவுள் உங்களை அதிகம் சோதித்திருப்பார் கவலை கொள்ளாதீர்கள்.
சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை.
ஏதோ ஒரு காரணத்தால் இறைவன் உங்களை காப்பாற்றி இருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் ‘நான் நம்பும் இறைவன் என்னை காப்பார்’ என்ற நம்பிக்கையுடன் கடந்து செல்லுங்கள். உங்கள் நம்பிக்கை உங்களை கைவிடாது.