உழைப்பில்லாமல்
உருவாக்கம் இல்லை…
நேரம் இல்லாமல்
உழைப்பு இல்லை…
நேரம் என்பது ஒருவரின்
வாழ்க்கையில் ஒரு பகுதி…
ஒவ்வொரு
உருவாக்கமும், உற்பத்தியும்
நேரத்தையும், உழைப்பையும் உள்ளடக்கியது…
உங்கள் வாழ்க்கையும்,
உங்கள் உழைப்பும்,
பொன்னான நேரமும்,
இந்த சமூகத்தை நல்ல முறையில்
உருவாக்கி சந்ததிக்கு பயன் தரட்டும்…
உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை
உங்களை யாரும் தாழ்த்த முடியாது…
உங்களை நீங்கள் உயர்வாக நினைக்காத வரை
உங்களை யாரும் உயர்த்த முடியாது…
உங்களின் உயர்வும் தாழ்வும்,
உங்களில் இருந்தே தொடங்குகிறது…
உங்கள் எண்ணங்களாலே தொடர்கிறது…
விதையை இழக்காமல் விருட்சம் இல்லை..
உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாக மாறுகிறது..
மாற்றம் ஒன்றே மாறாதது…
மாற்றம் இல்லாமல் ஏற்றம் இல்லை
நீங்கள் எதை அதிகம் போற்றுகிறீர்களோ…
நீங்கள் எதை அதிகம் தூற்றுகிறீர்களோ…
அதை உங்களை நோக்கி ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்…
நீங்கள் யாரை அதிகம் ஆதரிக்கிறீர்களோ…
நீங்கள் யாரை அதிகம் எதிர்க்கிறீர்களோ…
அவர்களின் தன்மையையும், குணங்களையும் ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்…
தூற்றுவதும், எதிர்ப்பதும் யாரும் இல்லை என்றாகட்டும்…
நல்லவை போற்றி, நல்லவர்களை ஆதரித்து…
நற் பண்புகளை அள்ளி ஈர்க்கும் காந்தமாக மாறுவோம்…
நம்மால் ஊரும், வையகமும் புது சக்தி பெறட்டும்…
வெறுப்பில் வாழ்வது…
நெருப்பில் தவழ்வதற்கு ஒப்பாகும்…
இந்த உலகம் உங்களுடையது,
இந்த உலகம் உங்களுக்கானது
என்று உணருங்கள்…
அன்பால்
அ(னை)ணைத்து விடுங்கள்…
அன்பால் அனைத்தும் சாத்தியம்…
காலத்தே செய்த ஒவ்வொரு
நன்றுக்கும் நன்றி சொல்வோம்…
நாளும் நன்றி சொல்வோம்…
மேலோங்கிய நன்றி உணர்வு
நல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது…
நல்லன சிந்தித்து…
நல்லன பேசி…
நல்லன செய்து…
நல்லவற்றையே எண் திசையிலும் பரப்புவோம்…
நன்றும், நன்றியும் சூழ…
எம் மக்கள் அகமும் புறமும் குளிர்ந்து மகிழட்டும்…
நம் சிந்தனையில் பிறந்த செயல்களே
நம்மை யார் என்று தீர்மானிக்கிறது !
தொழில் நுட்பத்தை
சரியான விதத்தில் பயன்படுத்தி,
நம் மக்களின்
தொழில்,
வேலைவாய்ப்பு,
பொருளாதார மேம்பாட்டிற்கு
தேவையான அனைத்து சிந்தனைகளையும்
செயல்களாக மாற்றுவோம் !
பல நூல் படித்து நாம் அறியும் கல்வி…
பொதுநலன் கருதி வழங்கிடும் செல்வம்…
பிறர் உயர்விலே இருக்கும் இன்பம்…
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்…
எல்லோரும் எல்லாமும் பெற…
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்…
எண்ணங்கள் உயரட்டும்
செயல்கள் பெருகட்டும்
சிந்தனை சீர் பெறட்டும்
உள்ளம் ஆர்ப்பரிக்கட்டும்…
அறிவு பூக்கள் பூக்கட்டும்…
எல்லோரும் எல்லாமும் பெற
கடந்துவந்த வலிகளைத் தாண்டி
வாய்ப்புகளை காண வேண்டிய நேரம்…
தடைக்கற்களை படிக்கற்களாக
மாற்றி முன்னேறிச் செல்ல
வேண்டிய தருணங்கள்…
ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
வாழ்க்கையை வடிவமைத்து தருவதில்லை…
தனித் திறமையும், முயற்சியும்
விவேகத்துடன் கூடிய செயலாக்கம்
நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தரும்…
காரணங்கள் கண்டு
குறை சொல்வதை தவிர்த்து
வெற்றிக் காரணிகளைக் கண்டு முன்னேறிச் செல்வோம்…
முன்னேற முடிவெடுத்த மனதால்
முன்னேற்றம் என்பது சாத்தியமே…
உணவோ…
உயிரோ…
உதவியோ…
ஊதியமோ…
பணமோ…
பொருளோ…
நாம் வாழும் இந்த கூட்டு சமூகத்தில் யாரோ ஒருவர் கொடுத்தே மற்றவர் பெறுகின்றோம்…
கொடுப்பதை
பெருந்தன்மையோடு
கொடுப்போம்…
பெறுவதை
நன்றியோடு
பெறுவோம்…
கொடுப்பதும் பெறுவதும் என் நாளும் தொடரட்டும்…
நாம் எடுப்பதைவிட கொடுப்பது மிகுதியாகவே இருக்கட்டும்…
இதுவே செல்வத்தை கிரகிக்கும்
சூட்சுமம் ஆகும்…
மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
பார்வைகள் மாறட்டும்…
பணம் பற்றி…
உழைப்பு பற்றி…
உயர்வு பற்றி…
வெற்றி நிலைகுறித்து…
பார்வைகள் மாறட்டும்.
கோணங்கள் மாற…
காட்சிகள் மாறும்.
காட்சிகள் மாற…
கருத்துக்கள் மாறும்.
கருத்துக்கள் மாற
சிந்தனைகள் மாறும்…
சிந்தனைகள் மாற
செயல்களும் மாறும்…
சிந்தனைகளும்
செயல்களும் மாற
சமூகமும் மாறும்…
சமூகம் மாற
புது உலகு பிறக்கும்…
பார்வைகள் மாறட்டும்
புது உலகு பிறக்கட்டும்…
விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…
காவியத் தாயே…
பூவுலகை விட்டு நீங்கினாலும்,
நீங்கா புகழுடன் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கள்…
பூவுலகில் நீங்கள் செய்யும் ஆட்சியை பார்த்து பிரமித்து,
விண்ணுலகம் அழைத்துக் கொண்டதோ ஆட்சி செய்ய அங்கும் !
விஸ்வரூபமாய், விருட்சமாய் இருந்த நீங்கள்,
விதைத்துச்சென்ற விதைகளாய் நாங்கள்…
விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…
என்றும் அம்மாவின் ஆசியுடன்
செயல்படும் உண்மை விசுவாசி…
வி. பன்னீர் செல்வம் ஆகிய நான்…
உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்…
சிறந்ததோர்
எதிர்காலத்தை
உருவாக்குவதற்காக
தற்போதைய சௌகரியங்களை தாண்டி இடையறாது உழையுங்கள்…
எந்த மக்களிடையே பிறந்தோமோ அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை என்ற விழிப்புணர்வுடன் உழைப்பவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்…
நம் நேரத்தையும் திறமையையும் உழைப்பாக மாற்றி இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பதையே கடமையாக கருதுவோம்…