Menu Close

காலை வணக்கம்

நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை…

நிமிர்ந்த நன்னடை…
நேர்கொண்ட பார்வை…
நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகளும்…
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்…
மகாகவி பாரதியார் கண்ட வழியில் வாழ்ந்தார்
நம்மையெல்லாம் என்றென்றும்
ஆசீர்வதித்து கொண்டிருக்கும்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…
நம் தொகுதியில் உள்ள
ஒவ்வொரு தாய்மார்களிடமும்
நம் அம்மாவை காணுகிறேன்…
உலக மகளிர் தினத்தில்
ஒவ்வொருவரையும்
அம்மாவை வணங்குவதாக வணங்கிப் போற்றுகிறேன்…
அம்மாவின் ஆசி…
என்றென்றும் நமக்காக நம்முடன்

எந்த இலக்காக இருந்தாலும் தீர்க்கமான தொடக்கமும், தொடர்ச்சியான முயற்சியும் மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.

100 அடி தூரம் ஆயினும்,
ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,
முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும்
அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும்.
அதைப்போலவே
எந்த இலக்காக இருந்தாலும்
தீர்க்கமான தொடக்கமும்,
தொடர்ச்சியான முயற்சியும்
மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.
தொடங்குங்கள்;
தொடருங்கள்;
சிகரம் தொடுங்கள் !

பெரு அதிசயம் ஆகட்டும் வளர்ச்சியும் வெற்றியும்…

வாழ்ந்த
நாட்களுக்கான அர்த்தம்,
வாழப் போகின்ற
நாட்களில் இருக்கிறது…

புது அர்த்தம்
ஆகட்டும் வாழ்க்கை…

பெரு அதிசயம்
ஆகட்டும்
வளர்ச்சியும் வெற்றியும்…

உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாகும்…

உளியின்
வலி தாங்கும்
கற்களே சிற்பங்களாகும்…
வாழ்வின்
கடினமான அனுபவங்களை
தாண்டும் மனிதர்களே
மாமனிதர்கள் ஆவார்கள்…

“மக்களால் நான்” என்றீர்கள்… “மக்களுக்காக நான்” என்றீர்கள்,

அம்மா
“மக்களால் நான்” என்றீர்கள்…
“மக்களுக்காக நான்” என்றீர்கள்,

அந்த மக்களாகவே உங்களைக் காண்கிறேன்…
உங்களையே அந்த மக்களிடம் காண்கிறேன்…

ஒவ்வொரு கணமும்,
ஒவ்வொரு தினமும்,

எங்களுக்குள்
புத்துணர்வாக…
அன்பாக…
அறிவாக…
பண்பாக…
பேராற்றல் ஆக
பிறந்து கொண்டே இருக்கும்
என் தானைத் தலைவி,
எங்கள் குலதெய்வம்,
தமிழகத்தை என்றும் காக்கும் தாய்…

உங்களை ஒவ்வொரு கணமும்
நன்றியுடன் நினைவுகூர்ந்து வணங்கி
தங்கள் ஆசியுடன்
என்னுடைய மக்கள் சேவையை தொடர்கிறேன்…

பிம்பங்கள் கலையட்டும்… சாயங்கள் வெளிரட்டும்… புது வண்ணங்கள் வான் ஏறட்டும்…

பிம்பங்கள் கலையட்டும்…
சாயங்கள் வெளிரட்டும்…
புது வண்ணங்கள் வான் ஏறட்டும்…
நம் மண்ணையும் மக்களையும்
பார்க்கும் பார்வை புதுப்பிக்கப்படட்டும்…
தொகுக்கப்பட்ட
பிரபஞ்ச அறிவே, அதிர்வலைகளாக
தொடர்பு கொள்ளும் மனித மனங்களில்
எண்ணங்களாக வெளிப்படுகிறது…
அந்த நல் எண்ணங்களே எந்த சூழ்நிலையிலும்
நம்மை இந்த உலகத்திற்கு பயனுள்ளவர்களாக, பயன் தருபவர்களாக வைக்கிறது…

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டிய தருணங்கள்…

கடந்துவந்த வலிகளைத் தாண்டி
வாய்ப்புகளை காண வேண்டிய நேரம்…

தடைக்கற்களை படிக்கற்களாக
மாற்றி முன்னேறிச் செல்ல
வேண்டிய தருணங்கள்…

ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
வாழ்க்கையை வடிவமைத்து தருவதில்லை…

தனித் திறமையும், முயற்சியும்
விவேகத்துடன் கூடிய செயலாக்கம்
நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தரும்…

காரணங்கள் கண்டு
குறை சொல்வதை தவிர்த்து
வெற்றிக் காரணிகளைக் கண்டு முன்னேறிச் செல்வோம்…

முன்னேற முடிவெடுத்த மனதால்
முன்னேற்றம் என்பது சாத்தியமே…

முயற்சி… முடிந்தவரை இல்லாமல் முடியும் வரை இருக்கட்டும்…

முயற்சி…
முடிந்தவரை இல்லாமல்
முடியும் வரை இருக்கட்டும்…
தொட்டுவிடும் தூரத்தில்
விட்டுவிடுவதாக இல்லாமல்
எட்டிப் பிடிப்பதாக இருக்கட்டும்…
கடமை…
கண்ணியம்…
கட்டுப்பாடு…
என்னும் தாரக மந்திரத்தை நம் சிந்தையிலே பதித்து
நம் நெஞ்சிலே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணா அவர்களை
அவருடைய நினைவு தினத்தில் வணங்கி…
நெஞ்சார்ந்த காலை வணக்கங்கள் தெரிவிக்கிறேன் !

நாம் வாழும் இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தமானதல்ல அடுத்த தலைமுறைக்கு உரித்தானது, சொந்தமானது…

நாம் வாழும் இந்த உலகம்
நமக்கு மட்டும் சொந்தமானதல்ல
அடுத்த தலைமுறைக்கு உரித்தானது, சொந்தமானது…
இந்த தேர்தல்
நிகழ்காலத்தை மட்டும்
கட்டமைக்க கூடிய
நமக்கான தேர்தல் மட்டுமல்ல…
அடுத்த தலைமுறையை…
அடுத்த தலைமுறைக்கான…
தலையெழுத்தையே மாற்றக்கூடிய தேர்தல்…
சிந்திப்பீர்…
செயல்படுவீர்…
ஆதரிப்பீர்…
எதிர்கால தலைமுறையின் வளமான நல்வாழ்க்கைக்கு…

நாம் நம்மை எப்படி நடத்துகிறோமோ அப்படியே இந்த சமூகமும் நம்மை நடத்துகிறது…

தன்னை உண்மையாகவும் முழுமையாகவும்
நேசிக்கும் ஒருவர் பிறரை வெறுப்பதில்லை…

தன்னை உண்மையாகவும் முழுமையாகவும்
மதிக்கும் ஒருவர் பிறரை அவமதிப்பதில்லை…

பிறரிடம் நாம் எதிர்பார்க்கும்
அன்பும் மரியாதையும்
நம்மிடம் இருந்தே தொடங்குகிறது…

நாம் நம்மை எப்படி நடத்துகிறோமோ
அப்படியே இந்த சமூகமும் நம்மை நடத்துகிறது…

உள்ளம் – அதின் பிரதிபலிப்பே இந்த உலகம்…

நமக்கு கொடுத்ததெல்லாம் கொடுப்பதற்காகவே கொடுக்கப்பட்டது…

பெறுபவர் என்று ஒருவர் இல்லாமல் கொடுக்க முடியாது…
கொடுப்பவர் என்று ஒருவர் இல்லாமல் பெற முடியாது…

நமக்கு கிடைத்த ஒவ்வொன்றும்
இயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது…

நமக்கு கொடுத்ததெல்லாம்
கொடுப்பதற்காகவே கொடுக்கப்பட்டது…

கொடுத்துக்கொண்டே இருங்கள்…
உழைப்பை கொடுங்கள்
அறிவைப் பகிர்ந்து கொடுங்கள்…
நல் வார்த்தைகளை கொடுங்கள்…
நல் நம்பிக்கையை கொடுங்கள்…

இங்கே கொடுப்பவருக்கே அனைத்தும் கொடுக்கப்படுகிறது !

கொடுங்கள், கொடுத்துக்கொண்டே இருங்கள்…
நம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

நம் மண்ணையும் மக்களையும் பார்க்கும் பார்வை புதுப்பிக்கப்படட்டும்…

பிம்பங்கள் கலையட்டும்…
சாயங்கள் வெளிரட்டும்…
புது வண்ணங்கள் வான் ஏறட்டும்…

நம் மண்ணையும் மக்களையும்
பார்க்கும் பார்வை புதுப்பிக்கப்படட்டும்…

தொகுக்கப்பட்ட
பிரபஞ்ச அறிவே, அதிர்வலைகளாக
தொடர்பு கொள்ளும் மனித மனங்களில்
எண்ணங்களாக வெளிப்படுகிறது…

அந்த நல் எண்ணங்களே எந்த சூழ்நிலையிலும்
நம்மை இந்த உலகத்திற்கு பயனுள்ளவர்களாக, பயன் தருபவர்களாக வைக்கிறது…

ஊரும் உலகமும் உங்கள் சொத்து… சுற்றமும் நட்பும் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு…

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

ஒருவரின் பெருமைக்கும்
அவரின் சிறுமைக்கும்
அவரவரின் செயல்களே காரணமாகிறது…

யாரையும் வாழ்த்துவது உங்களை உயர்த்தும்…
யாரையும் தூற்றுவது உங்களையே தாழ்த்தும்…

ஊரும் உலகமும் உங்கள் சொத்து…
சுற்றமும் நட்பும் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு…

உங்களின் நிலை அறிந்து சிந்தியுங்கள்…
உங்களின் பெருமை அறிந்து செயலாற்றுங்கள்…

சுயநலமற்ற பொதுநலம் விரைவில் நீர்த்துப் போகும்…

சுயநலமற்ற பொதுநலம்
விரைவில் நீர்த்துப் போகும்…

பொதுநல மற்ற சுயநலம் வளர்ச்சியற்று மங்கிப் போகும்…

சுயநலமில்லாமல்
பொதுநலம் இல்லை…

சுயநலமே வாழ்க்கையின்
எல்லை இல்லை…

சுயநலம் தாண்டிய
பொது நலமே
வாழ்வின் எல்லை…

சுயநலம் வளர்ந்து
பொதுநலம் ஆகி
பொதுநலம் தாண்டி
வளரும் போது
இந்த உலகம் உயர்ந்து
கொண்டே இருக்கும்…

மக்களோடு நான் !! மக்களுக்காக நான் !

ஒரு சொல்…
ஒரு செயல்…
ஒரு சிந்தனை…
ஒரு எண்ணம்…
ஒரு சந்திப்பு…
ஒரு கேள்வி…
ஒரு பதில்…
ஒரு அனுபவம்…

வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டது !
மாற்றமே ஏற்றம் தரும் !!

என் மக்களுக்கான…
மாற்றம் வேண்டி…
ஏற்றம் வேண்டி…

மக்களோடு நான் !!
மக்களுக்காக நான் !

Powered by J B Soft System, Chennai.