கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம்புதூரில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுமார் 1.50 கோடி மதிப்பில் சாலையின் இருபுறமும் பக்க கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் பூமி பூஜையில் கலந்துகொண்டு, இனிப்புகள் வழங்கி பணிகளைத் துவக்கி வைத்தார்.