திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு ஊராட்சியில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடல்பயிற்சி மையத்தை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், பூங்கா மற்றும் உடல்பயிற்சி மையத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி இவ்விரண்டையும் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கா.ஆனந்தன், ஆர்.சுப்பிரமணி, ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் எல்.என்.துரை, அரசு கூடுதல் வழக்குரைஞர் என்.எழில்மாறன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்