என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
தொடரும் கொரோனாவின் தாக்கம்…
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு…
மந்த கதியில் பொருளாதாரம்…
கலங்கிட வேண்டாம்…
மயங்கிட வேண்டாம்…
வேலை வாய்ப்புக்காக
காத்துக் கொண்டிருக்க வேண்டாம்…
சொந்தத் தொழில் செய்ய முனையுங்கள்…
சிறு முதலீட்டில் செய்யக்கூடிய
பல தொழில்கள் உண்டு…
விவசாயம் சார்ந்த தொழில்கள்
உணவு பொருள் உற்பத்தி & விற்பனை…
சுகாதாரம் சார்ந்த பொருட்கள் வாங்கி விற்பனை…
இப்படி ஏதாவது ஒரு தொழில் தொடங்க முனையுங்கள்…
என்னாலான எல்லா ஒத்துழைப்பையும்
எம்மக்களின் வாழ்விற்காக
நலனுக்காக என்றென்றும் செய்ய தயாராக இருக்கிறேன்…
ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்கள்…
கலசபாக்கம் தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள். அவர்களுக்கு தொழில் தொடங்க ஆலோசனை வழங்குங்கள்.
சரியான நேரத்தில் வழங்கும்
சரியான ஆலோசனை விலைமதிப்பற்றது…
என் அன்பிற்குரிய மக்களே…
எந்த காலக்கட்டத்திலும்…
எந்த சூழ்நிலையிலும்…
அதற்குத் தக்கவாறு நம்மை
மாற்றிக்கொண்டு
திறம்பட வாய்ப்புகளைக் கண்டறிந்து…
முன்னேறிக் கொண்டே இருங்கள்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…