கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை சார்பில் ஏரிகளில் 2020-21-கான ஆண்டு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் காரப்பட்டு ஏரியில் ரூ.98 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் மாதம் தொடங்க வேண்டிய குடிமராமத்து பணிகள் சற்று தாமதமாக ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மழை பெய்ய துவங்குவதற்கு முன் பணிகளை முடிக்க விரைவாக செயல்பட்டு வருகிறது தமிழக பொதுப்பணித்துறை.
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்யும் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் காரப்பட்டு ஏரியில் நடைபெறும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்தகாரர்களிடம் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்கவும் சிறப்பாக செய்யவும் கேட்டுக்கொண்டார்.