Menu Close

காளசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆய்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் அடுத்த காலசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம். ஆய்வு மேற்கொண்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அங்கு பணிபுரியும் செவிலியர்களிடம் தற்பொழுதுள்ள மருத்துவ அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களுக்கு நோய் தடுப்பு குறித்த ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் மருத்துவ பணியாளர்களின் குறைகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.