கலசப்பாக்கம் அருகே காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு 98.ஆம் ஆண்டு காளை மாடு விடும் விழா நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பங்கேற்று வீதியில் சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு ரசித்தார்.
கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் காணும் பொங்கல் மற்றும் கரிநாள் தினத்தை முன்னிட்டு 98.ஆம் ஆண்டு காளை மாடு விடும் விழா விழா குழுவினர் ராஜேந்திரன் தலைமையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த காளை மாடு விடும் விழாவில் சுற்றுப்பகுதியில் உள்ள 200.க்கும் மேற்பட்ட காளை மாடுகளில் உரிமையாளர்கள் தங்களுடைய காளைகளை அலங்கரித்து விழாவில் பங்கேற்க செய்தார்கள். மேலும் இந்த விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் V. பன்னீர்செல்வம் பங்கேற்று வீதியில் சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு ரசித்தார்.
மேலும் இந்த விழாவில் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வீதியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர்கள். இந்த விழாவில் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமம் பொதுமக்கள் திரளாக பங்கேற்று விழாவினை கண்டுகளித்தனர்.