ஜவ்வாது மலையில் உள்ள SFRD பள்ளியில் கணித ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், மற்றும் ஜேபி சாப்ட் சிஸ்டம் நிறுவனர் திரு. ஜெ. சம்பத் ஆகியோர் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.
கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்பேசுகையில், இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ அல்லது வேறு நல்ல முறையில் முன்னேற வேண்டும் என்றும், தவறான பழக்கவழக்கங்களை மேற்கொள்ள கூடாதென அறிவுரை வழங்கினார். மேலும் அரசு பணியில் சேர வேண்டும் என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
விழாவில் திரு.ஜெ. சம்பத் அவர்கள் தன்னுடைய அனுபவத்தையும் எண்ணங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டு ஜவ்வாது மலையில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது என கூறினார்.