Menu Close

சுமார் 7 கோடி மதிப்பில் கலசபாக்கம் அருகே கரையாம்பாடியில் கட்டப்பட்ட தடுப்பணை

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வழியே செல்லும் செய்யாறு பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தண்ணீர் ஆனது வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. எனவே விவசாயத்திற்குப் பயன் பெரும் வகையில் கலசபாக்கம் அருகே ஒரு தடுப்பணை அமைந்தால் அந்த நீர்த்தேக்கத்தினால் சுமார் 50 கிராமங்கள், விவசாயம், மற்றும் குடிநீர்த் தேவைகள் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும் என்று, அப்பகுதியே சேர்ந்த விவசாய பெரும் குடிமக்கள், நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்களிடத்தில் கோரிக்கை வைத்தனர். அதன் விளைவாக, சட்டமன்ற உறுப்பினர் தமிழக அரசிடம் பல முறை கோரிக்கை வைத்து சுமார் 7 கோடி மதிப்பில் கலசபாக்கம் அருகே கரையாம்பாடியில் இன்று தடுப்பணை கட்டப்பட்டு ஆற்றில் வருகின்ற நீர் ஆனது தேக்கிவைக்கப்படுகிறது. பெரும் முயற்சியெடுத்து இந்த தடுப்பணை அமையப் பாடுபட்ட நமது சட்டமன்ற உறுப்பினரை விவசாய பெருமக்கள் பாராட்டி மகிழ்கின்றனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.