திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, எழில் கொஞ்சும் பசுமை காடுகள் நிறைந்த ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர். இங்கு உள்ள மலைவாழ் மக்கள் தங்களுடைய வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட குறைகளை நிறைவு செய்வதற்காக சுமார் 40 ஆண்டுகளாக, சுமார் 45 கிலோமீட்டர் உள்ள, போளுர், செங்கம் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் ஒவ்வொரு முறையும் சட்டமன்ற நிகழ்வின்போது பலமுறை கோரிக்கை வைத்து, ஜமுனாமரத்தூர் தனி தாலுக்கா அமைய வேண்டும் என்று சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையின் விளைவாக, மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள்,புரட்சித்தலைவர் M.G.R.நூற்றாண்டு விழாவிற்குத் திருவண்ணாமலை நகருக்கு வருகை தந்தபோது, ஜமுனாமரத்தூர் தனி தாலுக்கா அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் பயனாக இன்று சுமார் 4 கோடி மதிப்பில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.