கலசப்பாக்கம் தொகுதி அதிமுக மற்றும் திருவண்ணாமலை எம்.ஜி.ஆர் கழகம் சார்பில் எம்.ஜி.ஆர் 102வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று அங்கு அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். உடன் மாவட்ட கழக உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
கலசப்பாக்கம் தொகுதியில் எம்.ஜி.ஆர் 102வது பிறந்த நாள் விழா இனிப்பு, அன்னதானம் வழங்கினார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்
Posted in நிகழ்வுகள்