கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் 179 பேருக்கு நேற்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K. பழனிச்சாமி, சென்னையில் தனது இல்லத்தில், நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V. பன்னீர்செல்வம் ஏற்பாட்டின் பேரில் இலவச ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்கினார்.
அப்போது அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கிக்கூறி, 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க சிறப்புடன் செயல்பட முதல்வர் ஆலோசனை வழங்கினார்.
நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V. பன்னீர்செல்வம் அவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு இலவச ஆண்ட்ராய்டு போன் வழங்குவேன் என உறுதியளித்ததை, தற்போது தமிழக முதல்வர் மூலம் நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.